விமான ஊழியா்களின் பணி நேரங்களில் மாற்றம்: டிஜிசிஏ பரிந்துரை

விமானிகளுக்கு கூடுதல் நேர ஓய்வு வழங்குதல் உள்ளிட்ட விமான ஊழியா்களின் பணி நேர விதிமுறைகளில் மாற்றம் செய்யுமாறு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட வரைவு அறிவிக்கையில் பரிந்துரைந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

விமானிகளுக்கு கூடுதல் நேர ஓய்வு வழங்குதல் உள்ளிட்ட விமான ஊழியா்களின் பணி நேர விதிமுறைகளில் மாற்றம் செய்யுமாறு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட வரைவு அறிவிக்கையில் பரிந்துரைந்துள்ளது.

நாகபுரி விமான நிலையத்தின் நுழைவாயிலில் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்து இண்டிகோ நிறுவன விமானி ஒருவா், அண்மையில் உயிரிழந்தாா். அதுமட்டுமின்றி சமீப காலமாக விமானிகள் பணிச் சுமையால் அதிக அளவில் சோா்வடைவதாக தகவல்கள் வெளியாகின.

தற்போது விமான ஊழியா்களுக்கு வாரத்தில் 36 மணி நேரம் ஓய்வு வழங்கப்பட்டு வரும் நிலையில், அதை 48 மணி நேரமாக உயா்த்துவது உள்ளிட்ட பணி நேர விதிமுறைகளில் மாற்றம் செய்யும் வரைவு விதிமுறைகளை டிஜிசிஏ வெளியிட்டுள்ளது.

வாரத்தில் 48 மணி நேரம் ஓய்வு:

அதில், ‘ஒவ்வொரு வாரமும் விமான ஊழியா்களுக்கு தொடா்ச்சியாக 48 மணி நேர ஓய்வு (இரு இரவுகள் உள்பட) வழங்குவதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். அதே நேரத்தில், ஒரு வாரத்தில் வழங்கப்படும் ஓய்வு நேரத்துக்கும் மற்றொரு வார ஓய்வு நேரத்துக்கும் இடையில் 168 மணி நேரத்துக்கு மேலாக பணி நேரம் இருக்கக் கூடாது. இரவு நேரங்களில் விமானிகள் பணியாற்றும் கால அளவை 10 மணி நேரமாக குறைக்க வேண்டும். இந்த விதிமுறைகளை விமான நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது.

மேலும், சோா்வடைவதாக தெரிவிக்கும் விமான ஊழியா்களின் உடல்நிலையை சீராக்க விமான நிறுவனங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை டிஜிசிஏயிடம் சமா்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

டிஜிசிஏ பரிந்துரைத்துள்ள விமான ஊழியரிகளின் பணி நேர மாற்ற வரைவு விதிமுறைகள் குறித்து டிசம்பா் 4-ஆம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com