ஓவியம் வரைந்த சிறுமிக்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி
சத்தீஸ்கர் மாநில பொதுக்கூட்டத்தின்போது, தன்னை ஓவியமாக வரைந்து கொடுத்த சிறுமிக்கு, பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியிருக்கிறார்.


சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தின்போது, தன்னை ஓவியமாக வரைந்து கொடுத்த சிறுமிக்கு, பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியிருக்கிறார்.
சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் பகுதியில் நவம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது பிரதமர் மோடியின் ஓவியத்தை தனது கையில் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தார் ஒரு சிறுமி.
அதனைப் பார்த்த பிரதமர் மோடி, உடனடியாக நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள், அந்தச் சிறுமியிடமிருந்து ஓவியத்தைப் பெற்றுக் கொள்ளுமாறும், அந்த ஓவியத்திலேயே, சிறுமி தனது வீட்டு முகவரியை எழுதிக்கொடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
மேலும், தான் நிச்சயம் சிறுமிக்கு கடிதம் எழுதுவேன் என்றும் உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில், சிறுமிக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், அன்புள்ள அகன்க்ஷாவுக்கு எனது வாழ்த்துகள். நீ வரைந்த ஓவியம் கிடைக்கப்பெற்றுவிட்டது. உனது அன்புக்கு மிக்க நன்றி.
நீ மிகப்பெரிய வெற்றியை நோக்கிச் செல்ல வேண்டும், அனைத்து நன்மைகளும் நீ அடைய வேண்டும். பிரகாசமான எதிர்காலத்துக்கு என் வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உன்னைப்போன் இளைஞர்களுக்கு அடுத்த 25 ஆண்டுகள் என்பது மிகவும் முக்கியமானவை. உங்கள் கனவை நனவாக்குவதோடு, நாட்டின் முன்னேற்றத்துக்கும் புதிய பாதை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...