வடகிழக்கு மாநிலங்களை தில்லியுடன் இணைத்தது பாஜக: மோடி

வடகிழக்கு மாநிலங்களை தில்லியுடன் இணைக்கும் பணிகளை செய்து முடித்தது பாஜகதான் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி


வடகிழக்கு மாநிலங்களை தில்லியுடன் இணைக்கும் பணிகளை செய்து முடித்தது பாஜகதான் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

மிசோரம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மிசோரம் மக்களிடம் காணொலி வாயிலாக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கலாசாரம் மற்றும் இயற்கை அழகைக் ஒருங்கே அமையக் கொண்டது மிசோரம். உலகளாவில சுற்றுலா தளமாக மாறும் தகுதி மிசோரம் மாநிலத்திற்கு உள்ளது. 

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால், அது வணிகம் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். உள்கட்டமைப்பு வசதிகள் மூலம் முதலீடு, தொழிற்சாலைகள், மற்றும் வருவாய் மற்றும் புதிய வாய்ப்புகளை அதிகரிக்க இயலும். கடந்தமுறை மிசோரம் மாநிலத்திற்கு வந்தபோது போக்குவரத்து மூலம் மாநிலத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என வாக்குறுதி அளித்திருந்தேன். 

பாஜக தலைமையிலான அரசு அதனை சிறப்பாக செய்து முடித்துள்ளது. 2013 - 14ஆம் ஆண்டுகளில் 11 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு நெடுஞ்சாலைகள் உருவாக்கப்பட்டன. 2023ஆம் ஆண்டில் 16 ஆயிரம் கிலோமீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com