

மத்திய புலனாய்வு அமைப்பின் இணை இயக்குநராக குஜராத் பிரிவு ஐபிஎஸ் அதிகாரி வி.சந்திரசேகரை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.
சிபிஐ இணை இயக்குநராக சந்திரசேகரை நியமிப்பதற்கான பணியாளர் மற்றும் பயிற்சி துறையின் முன்மொழிவிற்கு மத்திய அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் வழங்கியது.
பதவியேற்ற நாளில் இருந்து ஐந்தாண்டுகளுக்கு அல்லது இதுகுறித்து அடுத்த உத்தரவு வரும்வரை அவர் இப்பதவி வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அமைச்சருக்கு காலணி மாட்டிவிடும் பாதுகாவலர்: வைரலாகும் விடியோ
2000-ஆம் ஆண்டு பேட்ஜ் குஜராத் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான சந்திரசேகர் இதற்கு முன்பு மத்திய புலனாய்வு அமைப்பின் கீழ் காவல் கண்காணிப்பாளராகவும், டிஐஜியாகவும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.