
மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரில் 30 வயது பெண் ஒருவர் தெருவிலேயே குழந்தையைப் பெற்றெடுத்தார்.
தகவல் அறிந்து விரைந்த காவல்துறையினர், குழந்தையையும் தாயையும் உடனடியாக மருத்துவமனையில் கொண்டு அனுமதித்தனர்.
கமணி சந்திப்புக்கு அருகே குர்லா தெருவில் ஒரு பெண் தெருவிலேயே குழந்தை பெற்றெடுத்திருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உடனே காவல்துறையினர் அங்கு விரைந்து, மயங்கிக் கிடந்த தாயையும் குழந்தையையும் காப்பாற்றி பிரஹன்மும்பை நகராட்சி மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும், 'விசாரணையில் பெண்ணின் பெயர் ஸ்வர்ணா மிர்கல் எனத் தெரியவந்தது. மும்பை காவல்துறையின் 'நிர்பயா பதாக்' குழு தாயையும் குழந்தையும் சரியான நேரத்தில் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தது. குழந்தையும் தாயும் நலமாக உள்ளனர்' எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.
மும்பையில் செயல்படும் நிர்பயா பதாக் குழு பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இது திறமையான பயிற்சிபெற்ற பெண் காவல் அதிகாரிகளைக் கொண்ட இந்தக் குழு, தினமும் ரோந்துப் பணிகளை மேற்கொண்டுவருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.