தீபாவளியையொட்டி அலங்கரிக்கப்படும் ராமர் கோவில்!
அயோத்தியில் ராமர் கோயிலின் கருவறையில் நிறுவப்பட உள்ள தங்க முலாம் பூசப்பட்ட கதவைத் பொருத்தும்போது, அங்குள்ள தொழிலாளர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று பக்தி கோஷமிட்டவாறு பணிகளை தொடர்ந்தனர்.


அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயிலின் கருவறையில் நிறுவப்பட உள்ள தங்க முலாம் பூசப்பட்ட கதவை பொருத்தும்போது, அங்குள்ள தொழிலாளர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று பக்தி கோஷமிட்டவாறு பணிகளைத் தொடர்ந்தனர்.
தீபாவளியை முன்னிட்டு பி.டி.ஐ குழு இன்று கோயிலை பார்வையிட்டபோது, கர்பகிரகத்தை சாமந்திப்பூக்கள் மற்றும் குங்குமப்பூக்களால் அலங்கரிக்கப்பட்டு விளக்குகளால் ஒளியூட்டப்பட்டன.
ராமர் கோயில் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் தாங்கள் பாக்கியமாக உணர்கிறோம் என்றனர். பல்வேறு தெய்வங்களின் வடிவமைப்புகளுடன் தூண்களை செதுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒடிசாவைச் சேர்ந்த கோபிநாத் கூறுகையில், நான் கடந்த நான்கு மாதங்களாக இங்கு பணியாற்றி வருகிறேன். கோயில் கட்டுமானத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்குப் பெருமை அளிக்கிறது. நான் இங்கு வேலை செய்யப் போகிறேன் என எனது குடும்பத்தினர் அறிந்ததும், ஒரு சில அதிர்ஷ்டசாலிகளுக்கு மட்டுமே ராமர் கோயில் கட்டுமானத்தின் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பு கிடைப்பது குறித்து அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மற்றொரு தொழிலாளியான அசுதோஷ் பாண்டே கூறுகையில், நான் ராமரைப் பின்பற்றுபவன் என்ற முறையில், இங்கு பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதே வேளையில் எனது குடும்ப உறுப்பினர்கள் கிராமத்தில் உள்ள எங்கள் அண்டை வீட்டாரிடம் நான் இங்கே வேலை செய்வதை பெருமையுடன் தெரிவிக்கின்றனர்.
லட்சக்கணக்கான பக்தர்களின் மத மற்றும் கலாசார முக்கியத்துவத்தின் மையப்புள்ளியான ராமர் கோயிலின் முழுமையான கட்டுமானம் அதிக காலம் எடுக்கும் என்றாலும், கோயிலுக்கு உயிர் கொடுப்பது ஜனவரி மாதம் 22ம் தேதியன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
குடமுழுக்கு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான துறவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...