வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தில்லியில் லேசான நிலநடுக்கம்!

தில்லியின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் இன்று (நவ. 11) நில அதிர்வு ஏற்பட்டது.ரிக்டர் அளவில் 2.6ஆக பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :11 நவம்பர் 2023, 1:46 pm

DIN

தில்லியின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் இன்று (நவ. 11) நில அதிர்வு ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 2.6ஆக பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு தில்லியில் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு கீழே நிலநடுக்கத்தின் மையம் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் குறிப்பிட்டுள்ளது. 

தில்லியின் வடக்கு மாவட்டத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.6ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் பொதுமக்களுக்கோ, கட்டடங்களுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தலைநகரான தில்லியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

முன்னதாக நவம்பர் 6ஆம் தேதி தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.