ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார் ராஜ்நாத் சிங்

ஜகார்த்தாவில் நடைபெற உள்ள ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.
ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார் ராஜ்நாத் சிங்

ஜகார்த்தாவில் நடைபெறும் 10வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்கிறார்.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நவம்பர் 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெறும் 10-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பையொட்டி, அதில் பங்கேற்கும் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுடன் ராஜ்நாத் சிங் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்த உள்ளார். இந்த அமர்வுகளின் போது, ​​பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்து அமைச்சர்கள் விவாதிப்பார்கள்.

ஏடிஎம்எம் பிளஸ்-இன் தலைவராக இருப்பதால் இந்தோனேசியா இக்கூட்டத்தை நடத்துகிறது. நவம்பர் 16-ம் தேதி நடைபெறும் இந்த சந்திப்பின்போது, ​​பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச உள்ளார். 

ஆசியான் உறுப்பு நாடுகளுக்கும், அந்த அமைப்பின் உறுப்பினரல்லாத உரையாடல் பங்கேற்பாளர்களுக்கும் இடையிலான ஒரு தளமாகும். ஆசியான் அமைப்பில் புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், தாய்லாந்து, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய பத்து நாடுகள் உறுப்பினராக உள்ளன. மேலும் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் உறுப்பினரல்லாமல் கூட்டத்தில் பங்கேற்று வருகின்றன. 

ஆசியான் பிளஸ் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக 2017-ஆம் ஆண்டு முதல், இதன் அமைச்சர்கள் ஆண்டுதோறும் சந்தித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com