6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோட்டாவில் விமான நிலையம் இல்லாதது அதன் வளர்ச்சியை பாதிக்கிறது: ஜெய்ராம் ரமேஷ்

கல்வி மையமான கோட்டாவில் விமான நிலையம் இல்லாதது நகரத்தின் வளர்ச்சி திறனை பாதிக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இன்று தெரிவித்தார்.

News image
Updated On :16 நவம்பர் 2023, 4:17 pm

DIN

புதுதில்லி: கல்வி மையமான கோட்டாவில் விமான நிலையம் இல்லாதது, நகரத்தின் வளர்ச்சி திறனை பாதிக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இன்று தெரிவித்தார். இந்த நிலையில் மாநில அரசானது, நிலம் அடையாளம் கண்டறியப்பட்டு மத்திய அரசிடம் ஒப்படைத்து விட்டது. அதே வேளையில், மோடி அரசு தங்களுக்கு அநீதி இழைத்துள்ளது என்று மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

கோட்டா மக்களின் புகார்களில் ஒன்றானது, நகரத்திற்கு விமான நிலையத்தை உருவாக்காததன் மூலம் மோடி அரசு அவர்களுக்கு அநீதி இழைத்து விட்டது என்று மக்கள் தெரிவித்ததாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் கோட்டாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாஜக எம்.பி. கூட பிரதமரை செல்வாக்கு செலுத்துவதில் தோல்வியடைந்துள்ளார். அதே வேளையில், விமான நிலையம் இல்லாதது கோட்டாவின் வளர்ச்சி திறனை அதிகமாக பாதிக்கிறது.

நவம்பர் 25ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ் முயற்சித்து வரும் நிலையில் ஜெய்ராம் ரமேஷ் வருகை குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.