புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ராகுலின் வாக்குறுதியை சோனியா காந்தியே நம்பமாட்டார்: பாஜக

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் வாக்குறுதிகளை அவரின் தாயார் சோனியா காந்தியே நம்பமாட்டார் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா விமர்சித்துள்ளார். 

News image
Updated On :17 நவம்பர் 2023, 2:56 pm

DIN

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் வாக்குறுதிகளை அவரின் தாயார் சோனியா காந்தியே நம்பமாட்டார் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா விமர்சித்துள்ளார். 

ராஜஸ்தான் மாநிலத்திற்கு நவ. 25ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி ராஜஸ்தானில் தீவிர பிரசாரங்களில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பாஜகவை ஆதரித்து நடைபெற்ற பிரசாரத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்குறுதிகளை அளித்தது யார்? ராகுல் காந்தி. அவரின் வாக்குறுதிகளை யார் எடுத்துக்கொள்வார்கள்? அவரின் தாயாரான சோனியா காந்தியே ராகுலின் வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்ளமாட்டார். அவரின் வாக்குறுதிகளுக்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது. அவரின் வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்பவரைக் காட்டுங்கள் என கடுமையாக விமர்சித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.