ம.பி. தேர்தல்: காங்கிரஸ், பாஜக தொண்டர்கள் இடையேயான மோதல் குறித்து விசாரணை

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக தொண்டர்கள் இடையே எழுந்த மோதல் குறித்து போலீஸ் விசாரணை தொடங்கியது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக தொண்டர்கள் இடையே எழுந்த மோதல் குறித்து போலீஸ் விசாரணை தொடங்கியது.

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் வாக்குப்பதிவுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை மாலையில் பாஜக தொண்டர்கள் காங்கிரஸ் கட்சியினரால் தாக்கப்பட்டதாக பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் புகார் கூறியுள்ளனர்.

இதுகுறித்து ஜபல்பூர் காவல் கண்காணிப்பாளர் ஆதித்ய பிரதாப் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "காங்கிரஸ், பாஜக இரு வேட்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றோம். ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதனிடையே, சத்தர்பூர் மாவட்டத்தில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பாக பாஜக வேட்பாளர் அரவிந்த் பட்டேரியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது மத்தியப் பிரதேச போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இம்மாவட்டத்தில் உள்ள ராஜ்நகர் சட்டமன்ற தொகுதியில் பட்டேரியா போட்டியிட்டார். காங்கிரஸ் வேட்பாளர் விக்ரம் சிங்கின் புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

மத்தியப் பிரதேசத்தில் 230 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. வாக்குப்பதிவின் முடிவில் 76.22 சதவீத வாக்குகள் பதிவாகின.

2018 சட்டப்பேரவைத் தேர்தலில் 74.97 சதவீத வாக்குகள் பதிவானதை விட 2023 ஆம் ஆண்டு தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது. 

சியோனி மாவட்டத்தில் அதிகபட்சமாக 85.68 சதவீத வாக்குகளும், மாநில தலைநகர் போபாலில் 66 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

மத்தியப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் படேல் மற்றும் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் கமல்நாத் உட்பட 2,500க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக நடைபெறுவதால் இந்தத் தேர்தல் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் முக்கியமானது.

ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களுடன், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com