விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 படகுகள் எரிந்து நாசமானது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் நள்ளிரவு ஒரு படகில் ஏற்பட்ட தீ அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 35 ஃபைபர் இயந்திர படகுகளுக்கும் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
நிகழ்விடத்துக்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த சம்பவத்தில் உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை.
மர்மநபர்கள் யாரேனும் படகுகளுக்கு தீ வைத்திருக்கலாம் என உள்ளூர் மீனவர்கள் சந்தேகிக்கின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பேத்கா் பல்கலைக்கழகத்தில் 5 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம்

டாஸ்மாக் ஊழியா்கள் பெருந்திரள் முறையீடு

அபிராமி அம்மன் கோயில் தேரோட்டம்

உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வளாகத்தில் நெடுஞ்செழியன், கண்ணகி சிலைகள் அமைக்கக் கோரி வழக்கு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


