
ஜார்க்கண்ட் மாநிலம், கிழக்கு சிங்பம் மாவட்டத்தில் 2 யானை குட்டிகள் உள்பட 5 யானைகள் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளன.
பெனியசை என்கிற கிராமத்தில் திங்கள்கிழமை (நவ.20) இரவு இந்த நிகழ்வு நடந்துள்ளது. அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலிகளைக் கடக்க முயன்ற யானை கூட்டம் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.
அந்தப் பகுதியின் வன அலுவலர் மம்தா பிரியதர்ஷி பேசும்போது இதனை தெரிவித்துள்ளார்.
யானைகள் தாக்கப்பட்டது தெரிந்ததும் அந்தப் பகுதிக்கு விரைந்த வன அலுவலர்கள் அந்த மந்தையில் இருந்த மேலும் 4 யானைகளை அங்கிருந்து விரட்டியுள்ளனர்.
பாதுகாப்பாக அவற்றை கடக்க செய்த பிறகே யானைகளின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய இயலும் என்கிறார்கள் வன அலுவலர்கள்.
இதையும் படிக்க: 'பணக்காரர்கள் பற்றி மட்டுமே சிந்திக்கிறது பாஜக' - ராகுல் காந்தி
கடந்த சில நாள்களாக யானை கூட்டத்தின் நடமாட்டம் அங்கு தென்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.