விசாகப்பட்டினத்தில் லாரி மோதி 8 குழந்தைகள் படுகாயம்

ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் 8 குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
விசாகப்பட்டினத்தில் லாரி மோதி 8 குழந்தைகள் படுகாயம்

ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் 8 குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள பெத்தானி பள்ளியில் படிக்கும் 8 குழந்தைகளை இன்று (நவம்பர் 22) காலை பள்ளிக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ சங்கம் சரத் தியேட்டர் அருகே செல்லும்போது லாரியில் மோதி தூக்கி வீசப்பட்டது. 

இதுகுறித்து பேசிய காவல் துணை ஆணையாளர் சீனிவாச ராவ், “இந்த விபத்தில் பள்ளிக் குழந்தைகள் 8 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 4 பேருக்கு பெரிய அளவில் காயமின்றி தப்பினர். 3 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர். ஒரு பெண் குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.” என்று தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ லாரி வருவதைக் கவனிக்காமல் வேகமாகச் சென்று லாரியின் மீது மோதி தூக்கி வீசப்படுகிறது. இந்த சிசிடிவி காட்சியானது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com