சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

‘பாஜக மக்களை நேரடியாகச் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும்’: ப.சிதம்பரம்

மத்திய அரசு புலனாய்வு அமைப்புகளைப் பாஜக தவறாக பயன்படுத்துவதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

News image
ப.சிதம்பரம்
Updated On :2 பிப்ரவரி 2024, 3:25 am

DIN

மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளை ஆளும் பாஜக கட்சி தனது சாதகத்துக்காகப் பயன்படுத்திக் கொள்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தெலங்கானாவில் காங்கிரஸ் வேட்பாளர்கள் குறைந்தது நான்கு பேரைத் தேர்தல் பிரச்சார நேரத்தில் விசாரணைக்கு அழைப்பதும் அவர்களின் வீடுகளில் சோதனை நடத்துவதும் இத்தகைய அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை பாஜக வேட்பாளர் யாரையும் புலனாய்வு அமைப்பு விசாரணை மேற்கொள்ளவில்லை எனவும் அவர்கள் எல்லோரும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எனவு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்தப் பதிவில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், “என்னுடைய அறிதலில் ஒரு பாஜக வேட்பாளர் கூட இந்த அமைப்புகளால் சோதனைக்கு ஆளாகப்படவில்லை. பாஜக வேட்பாளர்கள் கடவுளால் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பதும் அவர்களுக்கு தெய்வீக ஆசிர்வாதம் உண்டு எனவும் தெரியும். ஒருவேளை பாஜக ஆட்சி அமைந்தால் தெலங்கானா மக்களை அவர்கள் நேரடியாகச் சொர்க்கத்துக்கு கூட அழைத்துச் செல்வார்கள். புலனாய்வு அமைப்புகளைத் தவறாக பயன்படுத்துவது மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் நவ.30-ல் வாக்குப் பதிவும் டிச.3 அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.