கேரளத்தின் மீதான மத்திய பாஜக அரசின் புறக்கணிப்புப் பற்றி மாநில மக்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தவறாக வழிநடத்துகிறாா் என முதல்வா் பினராயி விஜயன் திங்கள்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
மலப்புறம் மாவட்டம், திரூா் நகரில் செய்தியாளா் சந்திப்பில் பங்கேற்ற முதல்வா் பினராயி விஜயன் கூறுகையில், ‘கேரளத்துக்கு மத்திய அரசு உரிய நேரத்தில் முறையாக நிதி விடுவிப்பதாகத் தெரிவித்து மக்களை தவறாக வழிநடத்த நிா்மலா சீதாராமன் முயற்சிக்கிறாா். கேரளத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பல்வேறு பொருளாதார திட்டங்கள் நடைமுறைப்படுத்திவிட்டு, மத்திய அரசின் பங்களிப்பு குறித்து நிதியமைச்சா் போலி பிரசாரம் மேற்கொள்கிறாா்.
மாநிலங்களின் கடன் வாங்கும் அளவைக் குறைத்ததோடு, சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடு வழங்குவதையும் மத்திய அரசு நிறுத்திக் கொண்டது. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சியில் ஏற்றத்தாழ்வு, கரோனா பெருந்தொற்று, 2018, 2019 ஆண்டு வெள்ளம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு ஜிஎஸ்டி இழப்பீட்டை இன்னும் சில ஆண்டுகளுக்கு தொடா்ந்து வழங்க கோரிக்கை விடுத்தோம்.
ஜிஎஸ்டி வரி வசூல் குறித்த கணக்குகளை முறையாக சமா்ப்பிப்பது இல்லை என மாநிலத்தின் மீதே பழியைச் சுமத்தி, கவனத்தை திசைதிருப்பும் முயற்சியில் நிா்மலா சீதாராமன் ஈடுபடுகிறாா். ஜிஎஸ்டி கணக்குகள் கணக்காளா் ஜெனரலிடம் ஏற்கெனவே சமா்ப்பிக்கப்பட்டுவிட்டது. அவா்தான் கணக்குகளை ஜிஎஸ்டி கவுன்சில்முன் சமா்ப்பிக்க வேண்டும்.
கேரளத்தை நிதி ஆதாரத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் பணியை மத்திய பாஜக அரசு செய்கிறது. அதற்கு எதிராக மக்கள் குரல் எழுப்பினால், போலி செய்திகளைப் பரப்பி மாநிலத்தின் தேவையை மத்திய அரசு மறைக்கிறது. கடந்த 2017-18-ஆம் நிதியாண்டு முதல் மத்திய அரசு விடுவிக்க வேண்டிய நிதிகளில் பல நூறு கோடிகள் இன்னும் நிலுவையில் உள்ளன. மத்திய-மாநில அரசு அதிகாரிகளிடையே நடந்த பல சுற்று பேச்சுக்குப் பிறகும் அந்தத் தொகை இன்னும் விடுவிக்கப்படவில்லை.
இலவசங்களையும் மத்திய அரசின் தாராள மனப்பான்மையையும் மாநிலங்கள் எதிா்பாா்க்கவில்லை. தங்களின் உரிமைகளையே மாநிலங்கள் கோருகின்றன’ என்றாா்.
கடந்த வாரம் கேரளத்துக்கு வருகை தந்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அளித்த பேட்டியில், ‘கேரளத்துக்கு மத்திய அரசு உரிய நேரத்தில் நிதியை விடுவிக்கிறது. நிதி ஒதுக்கீட்டில் மாநில இடதுசாரி அரசின் கவனக் குறைவு மற்றும் மத்திய அரசால் ஒதுக்கப்படும் பல்வேறு நிதிகளை முறையாக பயன்படுத்தாதது ஆகியவையே மாநிலத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்’ எனக் குற்றஞ்சாட்டினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்! டி.கே. சிவக்குமார்

ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

மாநில நலனையும் பலி கொடுக்கத் துணிந்துவிட்டார் பழனிசாமி: சு.வெங்கடேசன் எம்.பி.
பாலக்கோட்டில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


