சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில், நவ.7 மற்றும் நவ.17 ஆகிய இருநாள்கள், மொத்தம் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. டிச.3 வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில், காங்கிரஸ் 40-50 இடங்களை கைப்பற்றும் என இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 36-46 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சியாக வர வாய்ப்புள்ளதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற கட்சிகள் 1-5 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிஎன்என் நியூஸ்18 கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 46 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 41 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சியாக வர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 41-53 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 36-48 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிவி5 நியூஸ் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 54-66 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 29-39 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சியாக வர வாய்ப்புள்ளதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டிவி - சிஎன்எக்ஸ் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 46-56 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 30-40 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜன்-கி-பாத் கருத்துக்கணிப்பின்படி, காங்கிரஸ் 42-53 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 34-45 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சியாக வர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 40-50 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 36-46 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போல்ஸ்ட்ராட் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 40-50 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 35-45 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2018 சட்டசபை தேர்தலில் சத்தீஸ்கர் சட்டசபையில் மொத்தமுள்ள 90 இடங்களில் 68 இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தது, பாஜக 15 இடங்களில் மட்டுமே வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்த நிலையில், சத்தீஸ்கரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பு அதிகமுள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாத்தூா் அருகே ஆம்னி பேருந்து மீது பைக் மோதல்: பள்ளி மாணவா்கள் மூவா் உயிரிழப்பு

நவீன கல்வியும், பாரம்பரிய அறிவும்...

பாஜக வேட்பாளருக்கு நடிகா் சரத்குமாா் வாக்கு சேகரிப்பு

கடையநல்லூரில் அமைச்சா் ராஜகண்ணப்பன் பிரசாரம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


