/

சிவகார்த்திகேயனின் அயலான் இசை வெளியீட்டு விழா அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News image
Updated On :30 நவம்பர் 2023, 2:07 pm

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில், ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அயலான் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆா் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. 

பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தில் அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகளும் 4,500-க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளும் கொண்ட இந்திய சினிமாவின் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது. 

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், படம் 2024 பொங்கலுக்கு வெளியாகுமென படக்குழு சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது. 

மேலும், இப்படத்தில் யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முன்னதாக இப்படத்திலிருந்து வேற லெவல் சகோ என்ற பாடல் வெளியானது.

இந்த நிலையில், அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெறும் என்றும், இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.