அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தில்லியில் பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமைக் காவலர் கைது

வடமேற்கு தில்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக புது தில்லி காவல்துறையின் தலைமை காவலர் கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :2 அக்டோபர் 2023, 12:11 pm

DIN

வடமேற்கு தில்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக புது தில்லி காவல்துறையின் தலைமை காவலர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட தலைமைக் காவலர் பல்விந்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றனர்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், செப்டம்பர் 30ஆம் தேதி மகேந்திரா பார்க் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அளித்த தில்லி காவல்துறையினர், புகார்தாரரும், குற்றம் சாட்டப்பட்டவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்றும், அவர் தன்னை மகேந்திரா பார்க் ஸ்டேஷன் பகுதிக்கு வருமாறு வற்புறுத்தியதாகவும், அங்கு அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிகாரிகள் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட காவலர் தில்லி காவல்துறையின் பட்டாலியனில் நியமிக்கப்பட்டவர். தற்போது, ​​மகேந்திரா பார்க் காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.