பிகாரில் 63% பிற்படுத்தப்பட்டோர்: சாதிவாரி கணக்கெடுப்பு விவரம் வெளியீடு!
பிகாரில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை அம்மாநில அரசு இன்று (அக்.2) வெளியிட்டுள்ளது.


பிகாரில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை அம்மாநில அரசு இன்று (அக்.2) வெளியிட்டுள்ளது.
இதில், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், மாநில மக்கள் தொகையில் 63 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
பிகார் மாநில வளர்ச்சித் துறை ஆணையர் விவேக் சிங் வெளியிட்டுள்ள சாதிவாரி கணக்கெடுப்பு முடிவு அறிக்கையில்,
மாநில மக்கள் தொகையில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் (இபிசி) 36%, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 27.13% உள்ளனர்.
பட்டியலின மக்கள் (எஸ்.சி) 19.65%, பழங்குடியின மக்கள் (எஸ்.டி.) 1.68% உள்ளனர். மாநிலத்தில் இந்துக்களின் மக்கள் தொகை 81.99%, முஸ்லிம் மக்கள் தொகை 17.70% உள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிகாரில் கடந்த ஜனவரி மாதம், மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பில் பிகார் மாநிலத்தில் உள்ள குடும்பங்களின் சாதியுடன் அவர்களின் பொருளாதார நிலையும் பதிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...