தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

பரபரப்பான சாலையில் திருடுபோன பேருந்து நிழற்குடை!

ரூ. 10 லட்சத்தில் துருப்பிடிக்காத எஃகு கம்பிகளைக் கொண்டு  உருவாக்கப்பட்ட நிழற்குடை ஒரு வாரத்தில் திருடப்பட்டிருக்கிறது.

News image
Updated On :5 அக்டோபர் 2023, 5:27 pm IST


பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியால் ரூ. 10 லட்சத்தில் துருப்பிடிக்காத எஃகு கம்பிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட நிழற்குடை ஒரு வாரத்தில் திருடப்பட்டிருக்கிறது.

இதில், விநோதம் என்னவென்றால், பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்குப் பின்பக்கத்திலும், கர்நாடக பேரவைக் கட்டடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கும் குறைவான தூரத்தில்தான் இந்தப் பேருந்து நிழற்குடை அமைந்திருந்தது. 

நிழற்குடை திருடுபோன ஒரு மாதத்துக்குப் பிறகு, செப்டம்பர் 30ஆம் தேதிதான் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகாரில், பெங்களூரு மாநகராட்சி சார்பில், பெங்களூரு மாநகருக்குள் புதிதாக பேருந்து நிழற்குடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட கன்னிகம் சாலையில் ஆகஸ்ட் 21ஆம் தேதிதான் புதிய நிழற்குடை அமைக்கப்பட்டது. அது துருப்பிடிக்காத எஃகினால் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது.

அந்த நிழற்குடையை ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்று பார்வையிட்டபோது, அங்கு அது இல்லை. பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்டதற்கு, தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டனர்.

இதையடுத்துதான் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மிகவும் பரபரப்பான, எப்போதும் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் ஒரு சாலையிலேயே, பேருந்து நிழற்குடையையே யாரோ களவாடிச் சென்றிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பயணிகள் கூறுகையில், புதிய நிழற்குடை அமைக்கப்பட்ட ஓரிரு நாள்களில் அதனை அகற்றிவிட்டார்கள். ஏன் என்று தெரியவில்லை. இப்போது மழை பெய்தாலும், வெயில் அடித்தாலும் வானமே கூரையாக பயணிகள் பேருந்துகளுக்காக நிழற்குடை இல்லாத நிறுத்தத்தில் காத்திருக்கிறார்கள் என்றனர்.

இந்தப் பகுதியிலிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக்  கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.