புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மத்தியப் பிரதேசத்தில் தனித்தனியே பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் ராகுல், பிரியங்கா

அக்டோபர் 10 மற்றும் 12ஆம் தேதிகளில் முறையே ராகுலும், பிரியங்காவும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கின்றனர்.

News image
ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும்
Updated On :7 அக்டோபர் 2023, 10:52 am

DIN


போபால்: நவம்பர் மாதத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் மத்தியப் பிரதேச மாநிலத்தில், அக்டோபர் 10 மற்றும் 12ஆம் தேதிகளில் முறையே ராகுலும், பிரியங்காவும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கின்றனர்.

மத்தியப் பிரதேசத்தில் 230 தொகுதிகளுக்கு நவம்பர் மாதத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. 

ஆளும் பாஜக, ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆட்சியைக் கைப்பற்ற தீவிர முன்முயற்சிகளை மேற்கொள்ளும்.

இந்த நிலையில்தான், அக்டோபர் 10ஆம் தேதி ஷஹ்தோல் மாவட்டத்தில் ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா, அக்டோபர் 12ஆம் த்தி மாண்ட்லாவில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிருக்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.