மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மீண்டும் முதல்வராவேனா? மக்களிடம் கேட்கும் சிவ்ராஜ் சிங் சௌகான்

நான் மீண்டும் முதல்வராவேனா என்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மக்களிடம் மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் கேள்வி எழுப்பினார்.

News image

சிவராஜ் சௌகான்

Updated On :7 அக்டோபர் 2023, 10:50 am


போபால்: நான் மீண்டும் முதல்வராவேனா என்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மக்களிடம் மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் கேள்வி எழுப்பினார்.

இந்த ஆண்டு இறுதியில், மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு பேரவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், மீண்டும் சிவ்ராஜ் சிங் சௌகான் மாநிலத்தின் முதல்வராக மாட்டார் என்று அண்மையில் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரியங்கா காந்தி கூறியிருந்தார்.

இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜக பொதுக் கூட்டத்தில் சிவ்ராஜ் சிங் சௌகான் நான் மீண்டும் முதல்வராவேனா என்று மக்களைப் பார்த்து கேள்வி எழுப்பினார்.

பேரவைத் தேர்தல் நெருங்கும் நேரத்ரிதல், மத்தியப் பிரதேச பாஜக தலைவர்கள் பலரும் சிவ்ராஜ் சிங் சௌகானை ஓரங்கட்டும் பணியில் தீவிரமாக உள்ளனர். மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் பட்சத்தில், முதல்வர் வேட்பாளருக்கு கடும் போட்டி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், தின்டோரி பகுதியில் திரண்டிருந்த மக்களைப் பார்த்து, சௌகான் கேள்விகளைக் கேட்டார். நான் ஒரு நல்ல அரசை நடத்துகிறேனா? இல்லையா? என்று உங்களிடம் கேட்க ஆசைப்படுகிறேன்.  எங்களது அரசு அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறுமா? பெறாதா? நான் மீண்டும் முதல்வராவேனா இல்லையா என்று மக்களிடையே கேள்விகளை எழுப்பினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.