5 மாநிலத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு

தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது. 
5 மாநிலத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு
Published on
Updated on
1 min read

தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு நடப்பாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2018ல் நடந்தது போலவே, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய 4 மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாகவும் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. 
இந்த நிலையில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது. நண்பகல் 12 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியாகிறது. மிசோரம் மாநில சட்டப்பேரவைக் காலம் வருகிற டிசம்பர் 17 ஆம் தேதியும் மற்ற 4 மாநிலங்களுக்கு ஜனவரி மாதத்திலும் முடிவடைகிறது. 
சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸும், மத்திய பிரதேசத்தில் பாஜகவும் தெலங்கானாவில் சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்ட்ரிய சமிதியும் மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணியும் ஆட்சி செய்து வருகின்றன. அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதால் இந்த 5 மாநிலத் தேர்தல் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com