பதான்கோட் தாக்குதல் முதன்மை குற்றவாளி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

பதான்கோட் தாக்குதலில் முதன்மை பயங்கரவாதியாக செயல்பட்ட ஷாஹித் லதீஃப் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
பதான்கோட் தாக்குதல் முதன்மை குற்றவாளி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை
Updated on
1 min read

புது தில்லி: 2016ஆம் ஆண்டு பதான்கோட் தாக்குதலில் முதன்மை பயங்கரவாதியாக செயல்பட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஷாஹித் லதீஃப் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

பாகிஸ்தானின் செயில்கோட் பகுதியில் உள்ள ஒரு மசூதியில், அடையாளம் தெரியாத நபரால், பயங்கரவாதி ஷாஹித் லதீஃப் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக அந்நாட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், லதீஃபை சுட்டுக் கொன்றவர்கள், உள்ளூரைச் சேர்ந்தவர்களாகவும், உள்ளூர் வழிகள் அனைத்தையும் தெரிந்தவர்களாகவும் இருந்ததாகவும், இதன் மூலம், உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள்தான் அவரை சுட்டுக்கொன்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே உறவை மேம்படுத்தும் வகையில், கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து லதீஃப் உள்பட 24 பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, 1999ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய ஏர்லைன் விமானத்தை கடத்திச் சென்ற பயங்கரவாதிகள், விமானத்தில் வந்த 154 பயணிகளை பிடித்து வைத்துக் கொண்டு விடுதலை செய்யுமாறு கேட்ட பயங்கரவாதிகளில் லதீஃப் பெயரும் இருந்த நிலையில், பேச்சுவார்த்தைக்குப் பின், பயங்கரவாத அமைப்பின் தலைவர் மௌலானா மசூத் ஆசார் உள்பட மூன்று பயங்கரவாதிகள் மட்டும் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். பயங்கரவாதிகளின் விருப்பப் பட்டியலில் இருந்த லதீஃப் உள்ளிட்ட 31 பயங்கரவாதிகளை விடுவிக்க அப்போதைய பிரதமர் வாஜ்பேயி தலைமையிலான மத்திய அரசு நிராகரித்துவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாபின் பதான்கோட் விமானப்படைத் தளத்தில் 2016-ஆம் ஆண்டு ஜனவரியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 7 பாதுகாப்புப் படையினா் உள்பட 8 போ் உயிரிழந்தனா். அத்தாக்குதலை நடத்திய ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தளபதியாகச் செயல்பட்டு வரும் பாகிஸ்தானைச் சோ்ந்த அலி காசிஃப் ஜேன் என்பவா் அதிகாரபூா்வமாக பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com