ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் கணவரைக் கொன்று உடலை மூன்று நாள்களாக வீட்டில் மறைத்துவைத்துள்ள மனைவியை போலீஸார் கைது செய்தனர்.
கியோஞ்சர் நகரக் காவல் நிலையத்திற்கு உள்பட்ட கொடிபாசா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு கொலை நடைபெற்ற நிலையில், உள்ளூர் மக்களிடம் இருந்து தகவல் கிடைத்ததும் போலீஸார் கிராமத்திற்கு விரைந்தனர்.
இதுகுறித்து நகரக் காவல் நிலைய ஆய்வாளர் சுனில் கூறுகையில்,
பழங்குடியின பெண்ணான சுனிதா ஜூங்காவுக்கு நான்கு குழந்தைகள். தன் கணவர் தூராவுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. தினமும் குடித்துவிட்டு மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
மற்ற நாள்களை விட கடந்த ஞாயிறன்று சுனிதாவை அடித்தும், தகாத வார்த்தைகளால் திட்டியும் கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த சுனிதா தனது கணவரை இரும்பு கம்பியால் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் தூரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, கணவரின் உடலை அப்புறப்படுத்தாமல் வீட்டிலேயே மறைத்துவைத்துள்ளார்.
வீட்டிலிருந்து ஒருவித துர்நாற்றம் எழுந்ததையடுத்து, சந்தேகத்தின்பேரில் அக்கம், பக்கத்தினர் கொடுத்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சுனிதாவை கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

மே 4, 5-ல் சோளிங்கா் மலைக்கோயில் ரோப்காா் சேவை ரத்து

கந்துலா சுலோச்சனா ராணியாக அனுபமா பரமேஸ்வரன்!

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


