தண்ணீர் இல்லை! காவிரி ஆணைய உத்தரவை மறு பரிசீலனை செய்ய கர்நாடகம் கோரிக்கை

கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசு கோரியுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசு கோரியுள்ளது. 

தில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று (அக். 13) பிற்பகல் நடைபெற்றது. இதில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம், கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

இதில், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று, தமிழகத்துக்கு வருகிற அக். 16 முதல் அக். 30 ஆம் தேதி வரை தினமும் விநாடிக்கு 3,000 கன அடி காவிரி நீரைத் திறக்க கர்நாடக அரசுக்கு  ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் காவிரி மேலாண்மை ஆணையம் தனது உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

கூட்டத்தில் கலந்துகொண்ட கர்நாடக நீர்வளத் துறைச் செயலாளர் ராகேஷ் சிங் இதனை வலியுறுத்தியுள்ளார். ஆனால், இதுகுறித்து ஆணையம் இதுவரை எந்த முடிவும் தெரிவிக்கவில்லை.

கர்நாடக அணைகளில் நீர் இருந்தும் ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு, தமிழகத்துக்கு நீர் திறக்க மறுப்பதாக தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com