படம் முடிந்து வெளியேற மறுத்த இளம்பெண்! காவலரைக் கடித்துத் தப்பிக்க முயற்சி!!

பெங்களூருவில் வணிக வளாகத்திலிருந்து வெளியேற மறுத்த இளம்பெண்ணிடம், விசாரணை மேற்கொண்டபோது காவல் துறையினரின் கையைக் கடித்து தாக்கிவிட்டுச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

பெங்களூருவில் வணிக வளாகத்திலிருந்து வெளியேற மறுத்த இளம்பெண்ணிடம், விசாரணை மேற்கொண்டபோது காவல் துறையினரின் கையைக் கடித்து தாக்கிவிட்டுச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. 

இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்

பெங்களூருவிலுள்ள வணிக வளாகத்தில் இரவுக் காட்சிக்கு 28 வயதுடைய இளம்பெண் சென்றுள்ளார். 10.30 மணிக்குத் தொடங்கிய படம் முடிந்த பிறகு வணிக வளாகத்திலேயே இருந்துள்ளார். இதனைக் கண்ட காவலாளிகள் அப்பெண்ணை வெளியேறுமாறு கோரினர். ஆனால், அவர் எதற்கும் பதிலளிக்காததால், மேலாளர் வந்து வெளியேறுமாறு வற்புறுத்தினார். 

எந்த பதிலும் கூறாமல் அங்கிருந்தவர்களை இளம்பெண் தாக்கி ஆரமித்ததால், மேலாளர் காவல் துறையினருக்கு புகார் அளித்தார். நிகழ்விடத்துக்கு வந்த பெண் காவல் உதவி ஆய்வாளர், அப்பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். 

அங்கு இளம் பெண்ணிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். எதற்கும் சரியாக பதிலளிக்காத அப்பெண், காவலர்களை தனது காலணியை கழட்டி அடித்துவிட்டு, பெண் காவலரின் கையைக் கடித்துவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். 

இளம்பெண்ணைப் பிடித்த காவல் துறையினர், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது, தாக்கியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

இளம்பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ முடிவுகளுக்காக காவல் துறையினர் காத்திருக்கின்றனர். இளம்பெண்ணுக்கு ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இளம்பெண், தாவணகரே பகுதியைச் சேர்ந்தவர். பட்டயக் கணக்காளரான அவர், தற்போது கோரமங்களா பகுதியிலுள்ள விடுதியில் தங்கியுள்ளா என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com