மிசோரம்: காங்கிரஸின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
மிசோரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 40 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு 39 வேட்பாளர்களை திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.

கோப்புப்படம்

கோப்புப்படம்
மிசோரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 40 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு 39 வேட்பாளர்களை திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.
ராஜஸ்தான், மிஸோரம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள் அடுத்த மாதம் 7 முதல் 30-ஆம் தேதி வரையிலான வெவ்வேறு நாள்களில் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 3-ஆம் நடைபெறும் என இந்திய தோ்தல் ஆணையம் கடந்த திங்கள்கிழமை அறிவித்தது.
இந்த நிலையில், மிசோரத்தில் போட்டியிடும் 39 வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
இதில் ஐஸ்வால் மேற்கு III எஸ்டி தொகுதியில் மாநில பிரிவு தலைவர் லால்சவ்தாவும், கட்சியின் சிட்டிங் எம்எல்ஏக்கள் லால்ரிந்திகா ரால்டே, ஜோடின்லுங்கா ரால்டே, நிஹார் காந்தி சக்மா, சி.நங்குன்லியான்சுங்கா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
பாலக் எஸ்டி சட்டமன்ற தொகுதியில் ஐந்தாவது சிட்டிங் எம்எல்ஏ கே.டி.ரோகாவை கட்சி குறிப்பிடவில்லை. அக்கட்சி ரோகாவுக்குப் பதிலாக ஐபி ஜூனியரை சட்டமன்றத் தொகுதியிலிருந்து மாற்றியுள்ளது.
மிசோரத்தில் வாக்குப்பதிவு நவம்பர் 7-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதியும் நடைபெறுகிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை மாநிலத்தில் நடைப்பயணத்துடன் தனது பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...