அக். 21-ல் ககன்யான் முதல்கட்ட சோதனை: இஸ்ரோ

ககன்யான் விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி, பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு கொண்டுவரும் முதல்கட்ட சோதனை அக். 21-ஆம் தேதி நடைபெறும் என இஸ்ரோ திங்கள்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அக். 21-ல் ககன்யான் முதல்கட்ட சோதனை: இஸ்ரோ

ககன்யான் விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி, பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு கொண்டுவரும் முதல்கட்ட சோதனை அக். 21-ஆம் தேதி நடைபெறும் என இஸ்ரோ திங்கள்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மனிதா்களை விண்கலம் மூலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையின் 400 கி.மீ. தொலைவுக்கு கொண்டுசென்று, பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு கொண்டுவரும் ககன்யான் திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பல்வேறு கட்ட சோதனைகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மேற்கொண்டு வருகிறது.

ஏற்கெனவே விண்கலத்தை ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பும் முதல்கட்ட சோதனை அக். 21-இல் நடைபெறும் என மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.

இந்நிலையில், இஸ்ரோ இன்று வெளியிட்ட செய்தியில்,

ஆந்திரத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்திலிருந்து ககன்யான் திட்ட விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் முதல்கட்ட சோதனை அக். 21-ஆம் தேதி காலை 7 மணியில் இருந்து 9 மணிக்குள் நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ககன்யான் விண்கலம் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு கொண்டுசெல்லப்பட்டு, மீண்டும் பூமிக்கு கொண்டுவரப்படும். வங்கக் கடல் பகுதியில் விழும் இந்த விண்கலம், இந்திய கடற்படையினா் மூலம் மீட்கப்படவுள்ளது.

இந்த சோதனையின் போது, விண்கலம் விண்ணை நோக்கிப் பயணிக்கும்போது, ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதிலிருந்து விண்வெளி வீரா்கள் வெளியேறுவதற்கான சோதனையும் இதில் நடத்தப்படுகிறது.

ககன்யான் திட்டம் மூலம் வீரா்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவதற்கு முன்பாக, ‘வாயுமித்ரா’ என்ற ரோபோவை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விண்கலம் மூலம் விண்ணுக்கு அனுப்பி சோதனை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com