நிதாரி தொடர் கொலை: குற்றவாளிகளின் மரண தண்டனை ரத்து; விடுதலை

நிதாரி தொடர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு குற்றவாளிகளின் மரண தண்டனையை ரத்து செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை விடுவித்துள்ளது.
சுரேந்திர கோஹ்லி, மொனீந்தர் சிங் பாந்தர்
சுரேந்திர கோஹ்லி, மொனீந்தர் சிங் பாந்தர்

நிதாரி தொடர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு குற்றவாளிகளின் மரண தண்டனையை ரத்து செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை விடுவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத் அருகில் நிதாரி பகுதியிலுள்ள ஒரு பங்களாவில் கடந்த 2006-ஆம் ஆண்டு குழந்தைகள் உள்பட 19 பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த வழக்கின் விசாரணையில் சிறுமிகள், இளம்பெண் உள்ளிட்ட 19 பேரையும் பாலியல் பலாத்காரம் செய்து புதைக்கப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பங்களாவின் உரிமையாளர் மொனீந்தர் சிங் பாந்தர் மற்றும் அவரது வீட்டு வேலைக்காரர் சுரேந்திர கோஹ்லி என்பரை சிபிஐ காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, பல்வேறு வழக்குகளில் மொனீந்தர் சிங்கிற்கும், கோஹ்லிக்கும் மரண தண்டனை வழங்கி கடந்த 2007-ல் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில், நிதாரி மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வந்த அலகாபாத் உயர்நீதிமன்றம், இருவரின் மரண தண்டனையும் ரத்து செய்து விடுதலை செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் அஸ்வனி குமார் மிஸ்ரா மற்றும் எஸ்.எச்.ஏ.ரிஸ்வி ஆகியோர் அமர்வு, குற்றவாளிகளுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை சமர்பிக்காததால் அவர்களை விடுவிப்பதாக தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com