ஆண்டுதோறும் 140 வீரர்கள் தற்கொலை: இந்திய ராணுவம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ஒவ்வொரு ஆண்டும் 100 முதல் 140 இந்திய ராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொள்வதாக ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
Indian Army
Indian Army

ஒவ்வொரு ஆண்டும் 100 முதல் 140 ராணுவ வீரர்கள் தற்கொலை செய்துகொள்வதாக இந்திய ராணுவம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் உள்ள ஒரு ராணுவ நிலையில் பணியில் இருந்த அம்ரித் பால் சிங் என்ற அக்னி வீரர் கடந்த 11-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.  அவரது இறுதிச் சடங்கில் ராணுவ மரியாதை செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. 

இதுகுறித்து இந்திய ராணுவம் எக்ஸ் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: தற்போதுள்ள நடைமுறைக்கு ஏற்ப, உயிரிழந்த அக்னி வீரரின் உடல் மருத்துவ மற்றும் சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆயுதப் படைகள், அக்னிபாதை திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்போ அல்லது அதற்குப் பின்னரோ வீரர்களுக்கு உரிய பலன்கள் மற்றும் மரியாதை தொடர்பாக வேறுபாடு காட்டியதில்லை. 

ஆயுதப்படைகளில் துரதிர்ஷ்டவசமான தற்கொலை சம்பவங்கள் நிகழும்போது அந்த வீரரின் இறுதிச் சடங்கில் ராணுவ மரியாதை அளிக்கப்படுவதில்லை. 

கடந்த 2001 முதல் ஒவ்வொரு ஆண்டும் 100 முதல் 140 பேர் வரையிலான வீரர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இந்த வீரர்களுக்கு இறுதிச் சடங்குகளை நடத்துவதற்கான உடனடி நிதியுதவி உட்பட, குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படுகிறத். இதற்கு முன்னுரிமையும் அளிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com