கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்றக் காவல் நவ.1 வரை நீட்டிப்பு!

ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் நவம்பர் 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 அக்டோபர் 2023, 11:51 am

DIN

ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் நவம்பர் 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி வகித்தபோது திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் ரூ.300 கோடியை தவறாகக் கையாண்டு ஊழல் செய்ததாக மாநில ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்து அவரை அண்மையில் கைது செய்து, நீதிமன்றக் காவலில் ராஜமகேந்திரவரம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஏற்கனவே மூன்று முறை அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில், நான்காவது முறையாக நவம்பர் 1-ஆம் தேதி வரை நீட்டித்து, விஜயவாடா ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.