மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

நாட்டின் முதல் நமோ பாரத் ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்

நாட்டின் முதல் நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி உத்தர பிரதேசத்தில் இன்று தொடங்கிவைத்தார்.

News image
Updated On :20 அக்டோபர் 2023, 2:27 pm

DIN

நாட்டின் முதல் நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி உத்தர பிரதேசத்தில் இன்று தொடங்கிவைத்தார்.

தில்லி - காஜியாபாத் - மீரட்டுக்கு இடையேயான 17 கி.மீ. தொலைவு வழித்தடத்தில் ஷாஹிபாபாத், காஜியாபாத், குல்தாா், துஹாய், துஹாய் டிபோட் ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன. உலகத் தரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த ரயில் நிலையங்களில் 15 நிமிஷங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.

அதிகபட்சமாக 180 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் இந்த ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பயணிகளின் வருகைக்கு ஏற்ப 5 நிமிஷ இடைவெளியில் ஒரு ரயிலை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ரூ.30,000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை பானிபட் வரையில் நீட்டிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் தில்லி - காஜியாபாத் - மீரட்டுக்கு இடையேயான நாட்டின் முதல் நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி உத்தர பிரதேசத்தில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி, தன்னுடன் பயணித்த ரயில் பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியரிடம் உரையாடினார்.

இந்நிகழ்வின்போது உத்தர பிரதேச முதல் யோகி ஆதித்யநாத் உடனிருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.