தென்மேற்கு அரபிக் கடலில் ‘தேஜ்' புயல் உருவானதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று (அக்.2) காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று(அக். 21) காலை புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | ககன்யான் சோதனை வெற்றி: இஸ்ரோ அறிவிப்பு
இது மேலும் வலுவடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து அக். 25 ஆம் தேதி தெற்கு ஓமன் மற்றும் அதனை ஒட்டிய ஏமன் கடலோரப் பகுதிகளுக்கு நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் சின்னத்திற்கு இந்தியா வழங்கிய 'தேஜ்' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த புயலினால் முதலில் குஜராத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தற்போது ஓமன் நோக்கி நகருவதால் குஜராத்துக்கு பாதிப்பில்லை என்றும் குஜராத்தில் அடுத்த 7 நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சென்னையில் மழை நிலவரம்: தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்கிறார்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE

இம்பாக்ட் வீரராக களமிறக்கப்பட்ட ஷர்துல் தாக்குரின் வித்தியாசமான சாதனை..! கோபத்தில் மும்பை ரசிகர்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

