சென்னையில் மழை நிலவரம்: தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்கிறார்?

சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இன்றும் நாளையும் (அக். 21, 22) அதிகாலையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக  தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இன்றும் நாளையும் (அக். 21, 22) அதிகாலையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக  தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இன்றும் நாளையும்(அக். 21, 22)  அதிகாலையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

சென்னையில் அக்டோபர் மாத இறுதியில் இயல்பைவிட குறைவான மழையே பெய்யும்.

வங்கக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஒடிசா - வங்கதேசம் நோக்கிச் செல்லும்.

அரபிக்கடலில் உருவாகும் புயல், இந்திய கடற்கரையை விட்டு நகர்ந்து செல்லும்.
இன்று உள் தமிழகம் மற்றும் கன்னியாகுமரியில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

கன்னியாகுமரிக்கு இந்த அக்டோபரிலேயே முழு பருவ மழையும் கிடைத்துவிடும்' என்று கூறியுள்ளார்.  

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து திங்கள்கிழமை (அக். 23) தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைக்குள் (அக். 22) வடகிழக்குப் பருவமழை தொடங்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com