எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இஸ்ரேலுக்கு இனி சீருடைகள் தைக்க மாட்டோம்: கேரள நிறுவனம் மறுப்பு!

கூத்துபறம்பில் அமைந்துள்ள மரியன் ஆடைகள் நிறுவனம் கடந்த 8 வருடங்களாக இஸ்ரேல் காவல் படைக்கு காவலர் சீருடைகள் தயாரித்து வழங்கி வந்தது. 

News image
மரியன் ஆடைகள் நிறுவனம்
Updated On :21 அக்டோபர் 2023, 7:04 am

DIN

கேரளா, கண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் மரியன் ஆடைகள் தயாரிப்பு என்கிற நிறுவனம், போர் முடியும் வரை இஸ்ரேல் காவல் படைக்கு தாங்கள் உடைகள் தைப்பதாக இல்லை என தற்காலிக நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

கூத்துபறம்பில் அமைந்துள்ள மரியன் ஆடைகள் நிறுவனம் கடந்த 8 வருடங்களாக இஸ்ரேல் காவல் படைக்கு, இஸ்ரேலில் உள்ள ஒரு முகமை வழியாக சீருடைகள் தயாரித்து ஏற்றுமதி செய்து வந்துள்ளது. ஆண்டுதோறும் 1 லட்சம் காவலர்களுக்கான சீருடைகள் இங்கிருந்து தயாரித்து அனுப்பப்படும்.

இந்த நிலையில், மனிதத்துவ அடிப்படையில் இஸ்ரேலுக்கு இனி இஸ்ரேலுக்கு உடைகள் தயாரிப்பதில்லை என முடிவெடுத்துள்ளது அந்நிறுவனம்.

இது குறித்து மரியன் ஆடைகளின் நிர்வாக இயக்குநர் தாமஸ் ஒலிக்கல் பேசுகையில், “மீண்டும் அமைதி திரும்பும்வரை, இஸ்ரேலுக்கு உடைகள் தயாரிப்பதாக இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இது நிறுவனத்திற்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும்  என்ற போதிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஆதரவைத் தெரிவிப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளோம் என்கிறார்கள் நிறுவனத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.