அன்னதான கூடத்தில் உணவருந்திய அமித் ஷா!
குஜராத்தில் தாயின் நினைவாக செயல்படும் அன்னதான கூடத்தில் உள் துறை அமைச்சர் அமித் ஷா மக்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.


குஜராத்தில் தாயின் நினைவாக செயல்படும் அன்னதான கூடத்தில் உள் துறை அமைச்சர் அமித் ஷா மக்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
குஜராத் மாநிலம் மன்சா பகுதியில் தனது தாயின் நினைவாக குசும்பென் அன்ன க்ஷேத்ரா என்ற பெயரில் அன்னதான கூடத்தை அமித் ஷா நடத்தி வருகிறார். இந்தக் கூடத்தில் நாள்தோறும் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மூன்று வேளையும் இலவசமாக ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வபோது இந்த அன்னதான கூடத்துக்கு அமித் ஷா தனது குடும்பத்துடன் வருகைபுரிவது வழக்கம். அந்தவகையில், இன்று அன்னதான கூடத்துக்கு வந்த அமித் ஷா அங்கு வந்த மக்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
அமித் ஷாவின் தாயார் பெயர் குசும்பென் ஷா. இவர் உடல்நலக்குறைவால் கடந்த 2010ஆம் ஆண்டு காலமானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...