மத்தியப் பிரதேசத்தில் சிவ்ராஜ் சிங் சௌகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
அங்கு ஆளும் பா.ஜ.க.வுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரசுக்கும் இடையே ஆட்சியைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் பாஜக அமைச்சரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேச போக்குவரத்து மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் கோவிந்த் சிங் ராஜ்புத் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். பாஜகவுக்கு ஆதரவாக அதிகபட்ச வாக்குகளைப் பெறும் வாக்குச்சாவடிக்கு ரூ.25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ராவணனாக நடிக்கும் கே.ஜி.எஃப் யாஷ்!
அவரது பேச்சு சமுக வலைதளங்களில் வைரலானது. இதற்கிடையே காங்கிரஸ் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. அதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மத்தியப் பிரதேச அமைச்சர் கோவிந்த் சிங் ராஜ்புத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஐபிஎல் சூதாட்டம்: தில்லியில் நால்வா் கைது

கம்பெனி சட்ட தீா்ப்பாய பொறுப்பு தலைவா் நியமன விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

அனைத்து அரசு ஊழியா்களுக்கும் பயோமெட்ரிக் வருகை கட்டாயம்: முதல்வா் ரேகா குப்தா நடவடிக்கை
ஐஎஸ்ஐ ஆதரவு உளவுப் பிரிவு அம்பலமானது: 11 போ் கைது
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


