பிரபல இந்தி இயக்குநர் நிதேஷ் திவாரி ராமாயணக் கதையை 3 பாகங்களாக திரைப்படமாக இயக்க உள்ளார். இதில் ராமனாக ரன்பீர் கபூரும், ராவணனாக கேஜிஎஃப் யாஷும் நடிக்க இருக்கின்றனர்.
சீதையாக சாய்பல்லவி நடிக்க இருக்கிறார். முதலில் ஆலியா பட் சீதையாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. அவர் விலகியதை தொடர்ந்து சாய்பல்லவி சீதையாக நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்குகிறது. நடிகர் யாஷ் ஜூலை மாதம் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார். அவர் தொடர்பான காட்சிகள் இலங்கையில் படமாக்கப்படவுள்ளன.
இதையும் படிக்க: பாரா ஒலிம்பிக்: ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கம்
இந்தப் படத்தில் நடிப்பதற்கு யாஷ் ரூ.150 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் கால்ஷீட் எத்தனை நாள் தேவைப்படுகிறது என்பதைப் பொருத்து சம்பளம் மாறக்கூடும் என பாலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.
2022-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த கேஜிஎஃப்-2 படத்தினை அடுத்து யாஷ் வேறு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெய்மரை கண்கலங்க வைத்த ஏஐ விடியோ..! 2030 உலகக் கோப்பையில் பங்கேற்பாரா?

ஒருநாள் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை!

நடிகர் ரஜினிகாந்த்தின் தர்மன் திரைப்படத்தில் ருக்மணி வசந்த்?

சிறந்த படைப்பாற்றல் திறன்: முதலிடத்தில் மைக்கேல் ஒலிஸே!
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



