எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஹமாஸ் இன்றைய ராவணர்கள்: கங்கனா ரணாவத்!

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இஸ்ரேல் தூதரைச் சந்தித்து பேசியுள்ளார்.

News image
Updated On :25 அக்டோபர் 2023, 9:47 am

DIN

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் நவோர் கிலானைச் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

கங்கனா ரணாவத் நடித்து திரைக்கு வரவிருக்கும் படம்  ‘தேஜஸ்’ இதற்கான ப்ரொமோஷன்களுக்காக டெல்லி சென்றிருந்தவர், இஸ்ரேல் தூதரைச் சந்தித்துள்ளார்.

அது குறித்து தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ள கங்கனா, “இஸ்ரேல் தூதருடன் மனதுக்கு நிறைவான சந்திப்பு. இஸ்ரேல் மற்றும் இந்தியா உள்பட ஒட்டுமொத்த உலகமும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஈடுப்பட்டுள்ளோம். ராவணனை எரிக்க (தசரா நாள் நிகழ்வு)  நான் டெல்லி சென்றிருந்த போதுn இஸ்ரேல் தூதரகம் சென்று,  இன்றைய ராவணர்களான ஹமாஸை வீழ்த்த போராடுபவர்களைச் சந்திக்க விரும்பினேன். குழந்தைகளும் பெண்களும் இலக்காவது  மனதை நெருடுகிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தப் போரில் இஸ்ரேல் நிச்சயம் வெல்லும் என நான் நம்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.