மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நாளை மகாராஷ்டிரம், கோவாவுக்குச் செல்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி நாளை மகாராஷ்டிரம், கோவாவுக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்க உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :25 அக்டோபர் 2023, 8:21 am

பிரதமர் நரேந்திர மோடி நாளை மகாராஷ்டிரம், கோவாவுக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்க உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவலில், 

அக்.26-ம் தேதி மகாராஷ்டிரம் செல்லும் மோடி புகழ்பெற்ற சீரடி சாய்பாபா கோயிலில் வழிபாடு மேற்கொள்கிறார். சீரடியில் புதிய தரிசன வரிசை வளாகத்தைத் திறந்துவைக்கிறார். பின்னர் சுமார் ரூ.7,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். 

கோவா மாநிலத்தில் 37வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கிவைத்து, விளையாட்டு வீரர்களிடம் உரையாற்ற உள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.