புதுதில்லி : தில்லி பாபர்பூர் பகுதியில் 565 கிலோ பட்டாசுகளுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.
இது குறித்து துணை காவல்துறை ஆணையர் ஜாய் திர்கி கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட லவ்காந்த் வட்ஸ்(35) அதிக அளவு பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இது குறித்து பாபர்பூர் பேருந்து நிலையம் அருகே சோதனை செய்ததில் லவ்காந்த் வட்ஸிடமிருந்து 565 கிலோ அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
எளிதாக பணம் சம்பாதிப்பதற்காக லவ்காந்த் வட்ஸ் இந்த குற்றத்தை செய்திருப்பதாக துணை காவல்துறை ஆணையர் ஜாய் திர்கி தெரிவித்தார்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இவ்வளவு பெரிய அளவிலான பட்டாசுகளை சேமித்து வைப்பது அங்குள்ள மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
லவ்காந்த் வட்ஸ் மீது ஐபிசி 286 பிரிவின் கீழ் (வெடிபொருள் தொடர்பான கவனக்குறைவான நடத்தை) மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
2024 ஜனவரி 1ஆம் தேதி வரை பட்டாசு உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் வெடிக்க தில்லி அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை! செய்திகள் நேரலை
கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்... மாநிலங்களவை தேர்தலில் பாஜக ஆதரவு சுயேச்சை வேட்பாளர் வெற்றி!
உலகின் மிகவும் திறன்வாய்ந்த மையமாக இந்தியா: பிரதமர் மோடி
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech



