தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஹிமாசலப் பிரதேச முதல்வர் மருத்துவமனையில் அனுமதி!

ஹிமாசலப் பிரதேசத்தின் முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

News image

சுக்விந்தர் சிங் சுக்கு

Updated On :26 அக்டோபர் 2023, 4:09 am

DIN

சிம்லா: ஹிமாசலப் பிரதேசத்தின் முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிம்லாவில் வியாழக்கிழமை ஏற்பட்ட கடும் வயிற்று வலி காரணமாக இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அதிகாலை 2.30 மணியளவில் முதல்வர் சுக்விந்தர் சிங் அழைத்துச் செல்லப்பட்டார்.

அவருக்கு தேவையான சிகிச்சையை மூத்த மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் அளித்து வருகின்றனர்.

முதல்வரின் உடல்நிலைக் குறித்து மருத்துவமனையின் மூத்த கண்காணிப்பாளர் மருத்துவர் ராகுல் ராவ் கூறியதாவது:

“வயிற்றுத் தொற்று காரணமாக முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எடுக்கப்பட்ட அனைத்து பரிசோதனையும் இயல்பாகதான் இருக்கிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது. இருப்பினும், முதல்வரை மருத்துவர்களின் கண்காணிப்பில் வைத்துள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.