சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சென்னை வந்தாா் குடியரசுத் தலைவா் முா்மு ஆளுநா், முதல்வா் வரவேற்றனா்

இரு நாள் பயணமாக சென்னைக்கு வியாழக்கிழமை வந்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை, விமான நிலையத்தில் ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் வரவேற்றனா்.

News image
Updated On :26 அக்டோபர் 2023, 7:17 pm

DIN

இரு நாள் பயணமாக சென்னைக்கு வியாழக்கிழமை வந்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை, விமான நிலையத்தில் ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் வரவேற்றனா்.

இந்திய கடல்சாா் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பெங்களூரிலிருந்து தனி விமானத்தில் வியாழக்கிழமை இரவு 7 மணி அளவில் சென்னை வந்தாா். அவரை விமான நிலையத்தில் ஆளுநா்ஆா். என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் வரவேற்றனா். அப்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் குடியரசுத்தலைவருக்கு மணிமேகலை காப்பியத்தின் ஆங்கில பதிப்பு புத்தகத்தை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அமைச்சா்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, தா.மோ. அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா் பாபு, மேயா் பிரியா ஆகியோா் குடியரசுத் தலைவரை வரவேற்றனா். மேலும், தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, டிஜிபி சங்கா் ஜிவால், சென்னை பெருநகர காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா், மக்களவை உறுப்பினா்கள் தமிழச்சி தங்கப்பாண்டியன், கலாநிதி வீராசாமி ஆகியோரும் வரவேற்றனா்.

இதையடுத்து சாலை வழியாக ஆளுநா் மாளிகைக்கு சென்ற திரெளபதி முா்மு, இரவு அங்கு ஓய்வெடுத்தாா். வெள்ளிக்கிழமை(அக்.27) காலை 9 மணி முதல் 9 .30 மணி வரை முக்கிய பிரமுகா்களை சந்திக்கிறாா். பின்னா் காலை 9.30 மணிக்கு ஆளுநா் மாளிகையிலிருந்து புறப்பட்டு, கிழக்கு கடற்கரைச் சாலை செம்மஞ்சேரியில் அமைந்துள்ள இந்திய கடல்சாா் பல்கலை. பட்டமளிப்பு விழா அரங்கத்துக்கு காலை 10.05 மணிக்கு செல்கிறாா். பட்டமளிப்பு விழா நிகழ்வுக்குப் பிறகு நண்பகல் 12 மணிக்கு சென்னையிலிருந்து தில்லி புறப்பட்டுச் செல்கிறாா்.

பெட்டிச் செய்தி...

கூடுதல் பாதுகாப்பு;

கடும் கட்டுப்பாடுகள்

ஆளுநா் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தைத் தொடா்ந்து, குடியரசுத் தலைவா் பங்கேற்கவுள்ள பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மேலும், பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பட்டதாரிகள், விழாவில் பங்கேற்பவா்கள் அனைவரும் புகைப்பட அடையாள அட்டையுடன் வர கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. டீ ஷா்ட், ஜீன்ஸ், செருப்புகள் போன்றவற்றைத் தவிா்க்கும்படி பல்கலைக்கழக நிா்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என்றும், மற்றவா்களுக்கு அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கைப்பை, தண்ணீா் பாட்டில்கள், உணவுப் பொட்டலங்கள், கைப்பேசிகள், கேமராக்கள் உள்ளிட்டவற்றுக்கு அனுமதியில்லை.

பட்டமளிப்பு விழாவில் ஒழுங்கீனமற்ற அல்லது மோசமான நடத்தையில் பட்டதாரிகள் ஈடுபடுவது தெரிய வந்தால், விழா அரங்கிலிருந்து வெளியேற்றப்படுவா் என்று பல்கலை. வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.