நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

60 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் மருத்துவக் கல்லூரியை பெற்ற மாநிலம்

மாநிலம் என்ற அந்தஸ்தைப் பெற்று 60 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், முதல் மருத்துவக் கல்லூரியைப் பெற்றிருக்கிறது நாகாலாந்து.

News image

நாகாலாந்து மருத்துவக் கல்லூரி

Updated On :27 அக்டோபர் 2023, 5:48 pm IST

திமாபூர்: மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரிக்காக தமிழகம் போராடி வரும் நிலையில், மாநிலம் என்ற அந்தஸ்தைப் பெற்று 60 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், முதல் மருத்துவக் கல்லூரியைப் பெற்றிருக்கிறது நாகாலாந்து.

அக்டோபர் இரண்டாம் வாரத்தில், நாகாலாந்து மாநிலம் கோஹிமாவில், மிக ரம்மியமான பின்னணியில் அமைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்.

நாகாலாந்து மாநில மக்களின் நீண்டநாள் கனவானது இதன் மூலம் நிறைவேறியிருக்கிறது. தற்போது, மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையும் நடைபெற்றுள்ளது.

Story image

மருத்துவக் கல்வியின் தேவையை நிறைவேற்றுவதுடன் நாகாலாந்து மக்களின் சுகாதார பாதிப்புகளையும் ஆய்வு செய்து அதற்கான தீர்வுகளை அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஏழு சகோதரி மாநிலங்களில் நாகாலாந்தும் ஒன்று. நாகாலாந்து, கடந்த 1963ஆம் ஆண்டு மாநிலமாக அறிவிக்கப்பட்டது. இதன் தலைநகரம் கோஹிமா. இதில் 12 மாவட்டங்கள் உள்ளன. நாகாலாந்து மாநிலம் முழுவதும் ஒரே மக்களவைத் தொகுதிக்கு உள்பட்டது.

Story image

இந்த மாநிலத்தில் பட்டியல் பழங்குடியின மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். இந்த மாநிலத்தில் ரயில் போக்குவரத்து என்பது மிக மிகக் குறைவு. வெறும் 15 கிலோ மீட்டர் நீளத்துக்குள்தான் இருப்புப் பாதை உள்ளது. இங்கு திமாபூரில் ஒரே ஒரு விமான நிலையமும், ரயில் நிலையமும் அமைந்துள்ளது. மலைப்பகுதி என்பதால், சாலைப் போக்குவரத்தும் பெரிய அளவில் இல்லாததால், சுற்றுலா பயணிகள் வருகையும் குறைவாகவே இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.