தில்லியில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசியுள்ளார்.
நாட்டில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு சிறப்புக்குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா என்பது குறித்து இந்த சிறப்புக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஒரே நாடு, ஒரே தேர்தல்: சிறப்புக்குழு அமைத்தது மத்திய அரசு!
இந்த அறிவிப்பு வெளியான ஒரு சில மணி நேரத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசியுள்ளார். ராம்நாத் கோவிந்தின் இல்லத்தில் இந்த சந்திப்பானது நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நாட்டின் அரசியல் சூழ்நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு எதிர்க்கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதுபோல செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை 5 அமர்வுகளாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரும் நடைபெற உள்ளது.
இதையும் படிக்க | செப். 18 முதல் 22 வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை: அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த கார்கே வலியுறுத்தல்!

அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது

நெசவு செய்து வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

