தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மும்பை விமான நிலையத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்

மும்பை விமான நிலையத்தில் 3 கிலோ எடை கொண்ட தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

News image
Updated On :1 செப்டம்பர் 2023, 11:30 am

DIN

மும்பை விமான நிலையத்தில் 3 கிலோ எடை கொண்ட தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மும்பை விமான நிலையத்தில் ஷார்ஜாவில் இருந்து மும்பை வந்த பயணி ஒருவரை வழிமறித்து சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது பயணி கொண்டு வந்த பாஸ்தா தயாரிக்கும் இயந்திரம் மற்றும் மிக்சி கிரைண்டரை அதிகாரிகள் சோதனை செய்ததில் அதில் தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
உடனே அவற்றை பறிமுதல் செய்து இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கத்தின் எடை 1.386 கிலோ என அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் ஷார்ஜாவில் இருந்து மும்பை வந்த மற்றொரு பயணியிடம் இருந்து 1.79 கிலோ எடைகொண்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 
அவர் பெல்ட் போன்று வடிவமைக்கப்பட்ட ஆடைகளுக்கு மத்தியில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.