இந்தியா கூட்டணி: நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!

டி.ஆர். பாலு, திருச்சி சிவா, ஆதிர்ரஞ்சன் செளத்ரி, திருமாவளவன், வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 
இந்தியா கூட்டணி: நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!


இந்தியா கூட்டணி கட்சி நாடாளுமன்ற அவைத் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தில்லியிலுள்ள மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்றுவரும் ஆலோசனைக் கூட்டத்தில், டி.ஆர். பாலு, திருச்சி சிவா, ஆதிர்ரஞ்சன் செளத்ரி, திருமாவளவன், வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

மேலும், சுப்ரியா சுலே, டெரிக் ஓ பிரையன், ராகவ் சத்தா, நவாஸ் கனி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். வரும் 18ஆம் தேதி தொடங்கும் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் செயல்பாடுகள் குறித்து விவாதிப்பதாகத் தெரிகிறது. 

மேலும், கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. மணிப்பூர் விவகாரம், அதானி விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்புவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. 

ஒரே நாடு ஒரே தேர்தல், பாரதம் என பெயர் மாற்றம் உள்ளிட்டவற்றை நிறைவேற்றும் முனைப்பில் பாஜக ஈடுபட்டுவரும் நிலையில், அது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. மேலும், மத்திய அரசின் முக்கிய மசோதா தொடர்பான கருத்துகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்து ஆலோசிப்பதாகத் தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com