எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஜி20: தில்லியில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு!

தில்லியில் ஜி20 மாநாடு நடைபெறுவதையொட்டி செப்.8 முதல் செப்.10 வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தில்லி பொதுப்பணித்துறை அமைச்சர் அதிஷி தகவல் தெரிவித்துள்ளார். 

News image
அதிஷி மார்லேனா
Updated On :6 செப்டம்பர் 2023, 12:08 pm

DIN

தில்லியில் ஜி20 மாநாடு நடைபெறுவதையொட்டி செப்.8 முதல் செப்.10 வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தில்லி பொதுப்பணித்துறை அமைச்சர் அதிஷி தகவல் தெரிவித்துள்ளார். 

ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை வகித்து வருகிறது. அக்கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கும் மாநாடு செப்டம்பா் 9, 10-ஆம் தேதிகளில் தில்லியில் உள்ள 'பாரத் மண்டபத்தில்' நடைபெறவுள்ளது.

இதற்காக தில்லியின் பிரகதி மைதானம் பிரம்மாண்டமாக தயாராகி வருகின்றது. முக்கிய தலைவர்கள் பலர் கலந்துகொள்வதால் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ஜி20 மாநாடு நடைபெறுவதையொட்டி தில்லியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செப்.8-10 வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் தலைவா்கள் அதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.